சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;
தாரமங்கலம்:
மேட்டூர் அருகே உள்ள தோரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் முருகன் (வயது 21). கூலித்தொழிலாளி. இவர் தாரமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற 17 வயது சிறுமியை கடந்த 10-ந் தேதி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை கடத்திய முருகனை கைது செய்தனர்.