மத்தூர் அருகே விவசாயி வீட்டில் பணம் திருடிய அண்ணன், தம்பி கைது
மத்தூர் அருகே விவசாயி வீட்டில் பணம் திருடிய அண்ணன், தம்பி கைது
மத்தூர்:
மத்தூர் அருகே உள்ள பிச்சனம்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 50). விவசாயி. இவருடைய வீட்டில் கடந்த மாதம் 24-ந் தேதி ரூ.2 லட்சம் திருடு போனது. இது குறித்து ராஜா மத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் விசாரணை நடத்தினார். இதில் பணத்தை திருடியது அதே பகுதியை சேர்ந்த அண்ணன், தம்பிகளான ரமேஷ் (37), காந்தி (36) என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை மீட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.