சேலம் பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி தலைமையில் போலீசார் நேற்று கோரிக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மதுரை (வயது 46) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.