கந்துவட்டி சட்டத்தில் 2 பெண்கள் கைது
கந்துவட்டி சட்டத்தில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
காளையார்கோவில்,
காளையார் கோவில் சோமசுந்தர நகரை சேர்ந்த தர்மராஜ் மனைவி ரம்யா (வயது35). இவர் திருநகரை சேர்ந்த சதீஷ்குமார் மனைவி பிரியா (30) மற்றும் அவரது தாயார் சாந்தாவிடம் 6 மாதங்களுக்கு முன்பு ரூ. 2 லட்சம் கடனாக பெற்றுள்ளார். 2 நாட்களுக்கு முன்பாக பிரியா மற்றும் அவரது தாயார் கடனை கேட்டு ரம்யாவை தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து ரம்யா புகாரின் பேரில் காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சரவண பாண்டியன் கந்துவட்டி சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பிரியா மற்றும் அவரது தாயார் சாந்தா ஆகிய 2 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.