ஓசூரில் வீட்டில் பதுக்கிய 1½ கிலோ கஞ்சா பறிமுதல்-வாலிபர் கைது

Update: 2022-09-05 16:09 GMT

ஓசூர்:

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சவுத்ரி (வயது 24). இவர் ஓசூர் அருகே மோரனப்பள்ளியில் நண்பர்களுடன் தங்கியிருந்து, தனியார் கம்பெனியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுத்ரி சொந்த ஊர் சென்றார். பின்னர் ஓசூர் திரும்பியபோது அவர் நண்பர்களுக்கு வழங்க கஞ்சா வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார் அவருடைய வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை பதுக்கிய சவுத்ரியை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்