சூதாடிய 4 பேர் கைது

சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-08-29 18:12 GMT

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே உள்ள பாமாகவுண்டம்பாளையம் குடிநீர் தொட்டி அருகே பணம் வைத்து சூதாடுவதாக நல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சூதாடியவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், வெய்காஞ்சாம்புதூரை சேர்ந்த கந்தசாமி (வயது 36), சென்னிமலை விக்னேஸ்வரன் (26), கொத்தமங்கலம் வாசுதேவன் (23), கருங்கல்காடு செந்தில்குமார் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், 8 மோட்டார் சைக்கிள்கள், ரூ.20 ஆயிரத்து 250 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்