கந்து வட்டிக்கொடுமை; பைனான்சியர் கைது
கந்து வட்டிக்கொடுமை செய்த பைனான்சியர் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி,
காரைக்குடி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் ருபைஷா பேகம் (வயது 27). இவர் காரைக்குடி அம்மன் சன்னதியில் பைனான்ஸ் நடத்தி வரும் சதீஷ்குமார் (43) என்பவரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.50ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதனை வாரம் ஒருமுறையாக வட்டியும் அசலுமாக திருப்பி செலுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சதீஷ்குமார் கந்துவட்டி கணக்கீடு செய்து வட்டிதான் கட்டப்பட்டுள்ளது. அசல் அப்படியே உள்ளது அதனை கட்டுமாறு கூறி கடனுக்காக எழுதிக்கொடுத்த பத்திரங்களை திருப்பி கொடுக்க மறுத்தாராம்.
இதுகுறித்து ருபைஷா பேகம் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜியிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.