தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட அண்ணன், தம்பி குண்டர் சட்டத்தில் கைது

தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட அண்ணன், தம்பியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திட மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.;

Update: 2022-08-25 22:20 GMT

வழிப்பறி

சேலம் அழகாபுரம் பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 29). அவருடைய தம்பி அஜித்குமார் (22). இவர்கள் இருவரும் கடந்த 6-ந் தேதி முன் விரோதம் காரணமாக பெரியபுதூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர்.

இதுதொடர்பாக அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த், அஜித்குமார் ஆகியோரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் 2 பேர் மீதும் ஏற்கனவே வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

இந்த நிலையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ஆனந்த், அஜித்குமார் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

இதை பரிசீலித்து ஆனந்த், அஜித்குமார் ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திட போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார். இதற்கான ஆணை சிறையில் உள்ள அண்ணன்-தம்பியிடம் அதிகாரிகள் வழங்கினர். ஏற்கனவே 2012-ம் ஆண்டு ஆனந்த்தும், 2020-ம் ஆண்டு அஜித்குமாரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்