இந்துமுன்னணி அமைப்பினர் 17 பேர் கைது

இந்துமுன்னணி அமைப்பினர் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-06-23 20:40 GMT


மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் என்.எஸ்.கே. திடல் பகுதியில் ஆட்டோ நிலையம் உள்ளது. அங்கு இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் அனுமதியின்றி ஆட்டோ சங்க அறிவிப்பு பலகையை நேற்று காலை வைத்தனர். இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக அந்த பகுதியில் சாலை மறியலும் நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் செல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதியின்றி வைத்த அறிவிப்பு பலகையை அகற்றினர். மேலும் இதுதொடர்பாக இந்துமுன்னணி அமைப்பினர் 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்