நாமக்கல் அருகே பிளஸ்-1 மாணவி பலாத்காரம் கட்டிட மேஸ்திரி போக்சோவில் கைது
நாமக்கல் அருகே பிளஸ்-1 மாணவி பலாத்காரம் கட்டிட மேஸ்திரி போக்சோவில் கைது;
நாமக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 16 வயது மகள் அரசுப் பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார். அவரை கடந்த மாதம் காட்டுபுத்தூரை சேர்ந்த குணசேகரன் மகன் கட்டிட மேஸ்திரி கார்த்திக் (வயது 22) என்பவர் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்ததோடு, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த பெற்றோர் நல்லிபாளையம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், கடந்த மாதம் வெளியூரில் இருந்த மாணவியை மீட்டனர். இந்த நிலையில் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கட்டிட மேஸ்திரி கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.