கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா விற்பனை செய்த 104 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் குட்கா விற்பனை செய்த 104 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் குட்கா விற்பனை செய்த 104 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மளிகை, பெட்டிக்கடைகளில் குட்கா விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி, ஓசூர், மத்திகிரி, தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், அஞ்செட்டி, உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை, பாகலூர், பேரிகை, சூளகிரி, குருபரப்பள்ளி, மத்தூர், பர்கூர், கந்திகுப்பம், ஊத்தங்கரை, கல்லாவி, சாமல்பட்டி, சிங்காரப்பேட்டை, பாரூர், நாகரசம்பட்டி, காவேரிப்பட்டணம் என மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் கடைகளில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
104 பேர் கைது
இதில் மாவட்டம் முழுவதும் மளிகை, பெட்டிக்கடைகளில் குட்கா விற்பனை செய்ததாக 104 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.