பொக்லைன் எந்திர டிரைவரை தாக்கியவர் கைது
ஓசூரில் பொக்லைன் எந்திர டிரைவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.;
ஓசூர்:
ஓசூர் சிப்காட் கோவிந்த அக்ரஹாரம் சர்க்கிள் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 35). பொக்லைன் எந்திர டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் அஜய்குமார் (26). நேற்று முன்தினம் மாலை குடிபோதையில் அஜய்குமார் தகராறில் ஈடுபட்டு வினோத்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் ஓசூர் சிப்காட் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜய்குமாரை கைது செய்தனர். ஏற்கனவே அவர் மீது சிப்காட் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.