மில் அதிபர் வீட்டில் நகை திருடியபெண் கள்ளக்காதலனுடன் கைது

நாமகிரிப்பேட்டை அருகே மில் அதிபர் வீட்டில் நகை திருடிய பெண்ணை கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-14 18:53 GMT

நாமகிரிப்பேட்டை

நாமகிரிப்பேட்டை அருகே தண்ணீர்பந்தல்காடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 52). இவர் சொந்தமாக ஜவ்வரிசி மில் வைத்துள்ளார். இவரது வீட்டில் கனிமொழி (30) என்பவர் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கண்ணன் வீட்டில் வைத்திருந்த 12 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கண்ணன் இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன் வீட்டில் வேலை செய்யும் கனிமொழியிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கண்ணன் வீட்டில் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் இவர் திருடிய நகைகளை தஞ்சாவூரில் உள்ள தனது கள்ளக்காதலன் மோகன் என்பவரிடம் கொடுத்துவிட்டதாக கூறினார். பின்னர் தஞ்சாவூரில் உள்ள மோகனை பிடித்து அவரிடமிருந்து நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் கனிமொழி, அவருடைய கள்ளக்காதலன் மோகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்