தேன்கனிக்கோட்டை
அஞ்செட்டி அருகே உள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 54). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு அஞ்செட்டியில் உள்ள பெட்டிக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வண்ணாத்திப்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவர் நாகராஜனிடம் மதுகுடிக்க மதுபானம் கேட்டுள்ளார். ஆனால் நாகராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் பீர்பாட்டிலால் நாகராஜனை தாக்கினார். இதில் காயமடைந்த அவர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின்பேரில் அஞ்செட்டி போலீசார் ராஜ்குமாரை கைது செய்தனர்.