தேன்கனிக்கோட்டை:
தளி அருகே உள்ள அகலக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மாடு பக்கத்து வீட்டில் வசிக்கும் லட்சுமி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் இருந்த பயிர்களை தின்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த முன்விரோதம் காரணமாக லட்சுமியின் பேரன்களான ஓசூர் அவ்வையார் நகரை சேர்ந்த அபிேஷக் (21), அவருடைய தம்பி விஜயகுமார் (19), மற்றும் 2 பேர் சேர்ந்து வெங்கடேஷ் வீட்டிற்குள் நுழைந்து அவரை மரக்கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த அவர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக தளி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அபிேஷக்கை கைது செய்தனர். விஜயகுமார் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.