கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் நேற்று முன்தினம் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 201 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பொருட்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். இதையடுத்து காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குட்கா கடத்தியதாக ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் கோடிஜியை சேர்ந்த பிரகாஷ் பூரி (வயது 29) என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு குட்கா கடத்த முயன்றது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.