தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை தாலுகா கக்கதாசம் வருவாய் ஆய்வாளராக இருப்பவர் சரவணன் (வயது55). இவர், கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்ய வருவாய் ஆய்வாளர் சரவணன் சென்றார். அங்கு வந்த சித்தராஜ் என்பவர் நில ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சினையில் வருவாய் ஆய்வாளர் சரவணனை தகாத வார்த்தையால் திட்டி பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தளி போலீசில் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் சித்தராஜை நேற்று போலீசார் கைது செய்தனர்.