மொரப்பூர் வனப்பகுதியில்மான் வேட்டையாடிய 2 பேர் கைது

Update: 2023-08-17 19:00 GMT

மொரப்பூர் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

மான் வேட்டை

வனவிலங்குகள் வேட்டை தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தர்மபுரி வனத்துறையினர் மொரப்பூர் காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மான் கறியுடன் சிக்கிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் பென்னாகரம் அருகே உள்ள ஏ.கோடுபட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 32), பெருமாள் (30) என்பது தெரியவந்தது. அவர்கள் நாட்டுத்துப்பாக்கியை பயன்படுத்தி புள்ளிமானை வேட்டையாடி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

குண்டர் சட்டம்

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு கூறுகையில், கள்ளத்துப்பாக்கி வைத்திருத்தல், வனவிலங்குகளை வேட்டையாடுதல் தண்டனைக்குரிய குற்றமாகும். கள்ளத்துப்பாக்கி வைத்திருப்போர் தாமாகவே முன்வந்து போலீசார் அல்லது வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். எவரேனும் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்தாலோ, வனவிலங்குகளை வேட்டையாடுதல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலோ சம்மந்தப்பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்குள் தேவையின்றி அத்துமீறி உள்ளே நுழைந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வன உயிரினப்பாதுகாப்பு சட்டம் 1972-இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்