கல்லூரியில் கணினிகள் திருடிய 2 பேர் கைது

கல்லூரியில் கணினிகள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-07-29 19:44 GMT

மேட்டூர்:

கொளத்தூர் அருகே அய்யம் புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கணினி மற்றும் மடிக்கணினி திருட்டு போனது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொளத்தூர் போலீசார் மாங்காடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பாலவாடி பகுதியை சேர்ந்த விஜய் (வயது 26), அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (23) என்பதும், இவர்கள் தனியார் கல்லூரியில் கணினிகள் திருடியதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் கணினிகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்