கற்கள் கடத்தியவர் கைது

Update: 2023-07-05 19:00 GMT

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை மண்டல துணை தாசில்தார் சத்யவாணி மற்றும் அதிகாரிகள் ஓலப்பட்டி கூட்ரோடு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 யூனிட் உடை கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கற்கள் கடத்தியதாக மத்தூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்