மாணவிகளுக்கு உடனடியாக கல்வி கடன் வழங்க ஏற்பாடு
உயர்கல்வி கற்கும் 2 மாணவிகளுக்கு உடனடியாக கல்வி கடன் வழங்க கலெக்டர் ஜெயசீலன் நடவடிக்கை மேற்கொண்டார்.;
உயர்கல்வி கற்கும் 2 மாணவிகளுக்கு உடனடியாக கல்வி கடன் வழங்க கலெக்டர் ஜெயசீலன் நடவடிக்கை மேற்கொண்டார்.
வேளாண் மாணவி
சாத்தூர் தாலுகா இருக்கன்குடியை சேர்ந்த அருணா தேவி என்ற மாணவி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்துள்ள மனுவில் தான் விவசாய பல்கலைக்கழகத்தில் இளங்கலை தோட்டக்கலை 2-ம் ஆண்டு படித்து வருவதாகவும், தற்போது குடும்பத்தில் சிரமமான சூழ்நிலை உள்ளதால் கல்லூரி பருவத்தேர்வுக்கான கட்டணம் செலுத்த இயலாத நிலை உள்ளதாகவும் அதனால் கல்வி கடன் வழங்கும்படி கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின்படி அந்த மனுவை உடனடியாக பரிசீலித்து உண்மை தன்மையை ஆராய்ந்து மாணவிக்கு மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி மூலம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கல்வி கடன் வழங்குவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.
கல்வி கடன்
விருதுநகரை சேர்ந்த சினேகா என்ற மாணவி தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை செவிலியர் 3-ம் ஆண்டு படித்து வருவதாகவும் தற்போது அவரது குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வி கடன் வேண்டி சென்ற வாரம் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.
அதன்படி மாணவிக்கு வங்கி மூலம் ரூ.2 லட்சத்திற்கான கல்வி கடன் பெறுவதற்கான உத்தரவினை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.