கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-04-25 14:45 GMT


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒரத்தநாடு அருகே கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்தின் உள்ளே புகுந்து மர்ம நபர்கள் வெட்டிக்கொன்றனர். இந்த சம்பவத்தை அடுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையுடன் பல்லடம் தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்