வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று மாலை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் கால அவகாசம் இன்றி விடுமுறை தினங்களிலும் தொடர்ச்சியாக வளர்ச்சி துறை ஊழியர்கள் மீது பணிகளை திணிக்கும் அரசின் நடவடிக்கைகளை கண்டித்து கைவிடக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வெள்ளகோவில் வட்டார தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.