நகை திருடிய ராணுவ வீரர் கைது

ஆற்காடு அருகே நகை திருடிய ராணுவவீரர் ராணுவவீரர் செய்யப்பட்டார்.;

Update:2023-06-14 17:51 IST

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த சின்னமேட்டு குடிசை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி ராதிகா. இவர்கள், குடும்பத்துடன் வீட்டின் வெளியே தூங்கி உள்ளனர். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து திமிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வேலூரை அடுத்த சோழவரம் கிராமத்தை சேர்ந்த ராணுவவீரர் பன்னீர்செல்வம் (வயது 40) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார், அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 3 பவுன் நகை, 150 கிராம் எடைக்கொண்ட வெள்ளி அருணாக்கயிறு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்