ராணுவ அதிகாரி வீட்டில் பணம் திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூரில் ராணுவ அதிகாரி வீட்டில் பணத்தை திருடி சென்றனர்.;
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அங்குராஜ் நகரில் வசித்து வருபவர் ஆனந்தராஜ் (வயது49). இவர் ராணுவத்தில் சுபேதார் மேஜராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 13-ந் தேதி விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அவர் சிவகாசி இந்திரா நகரில் வசித்து வரும் அவரது தந்தை வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது சூட்கேசில் இருந்த ரூ.50 ஆயிரம், கேமரா, புதிய செல்போன், ராணுவ அங்காடி அடையாள அட்டை உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆனந்தராஜ் அளித்த புகாரின் பேரில் நகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.