ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-06 14:34 GMT

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது;

"பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ஒரு கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை. கடந்த 3 மாதத்தில் 6 படுகொலைகள் நிகழ்ந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். கொலை செய்தவர்கள் எந்த அரசியல் பின்புலத்தில் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சாமஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்