புதுவண்ணாரப்பேட்டையில் ரவுடியை ஓட, ஓட விரட்டி வெட்டிய கும்பல்; 6 பேருக்கு வலைவீச்சு
புதுவண்ணாரப்பேட்டையில் பழிக்குபழியாக ரவுடியை வெட்டிய கும்பலை போலீசார் வலைவீசிதேடி வருகின்றனர்.;
புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 26). பிரபல ரவுடியான இவர், நேற்று இரவு தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுகுடித்து விட்டு வந்த போது, மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கத்தியால் தமிழரசனை ஓட, ஓட விரட்டி வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதில், அவருக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. புதுவண்ணாரப்பேட்டை போலீசார் தமிழரசனை மீட்டு, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.கடந்த ஆண்டு ஜீவன்குமாரை என்பவரை தமிழரசன் கொலை செய்ததாகவும், அதற்கு பழிக்குபழியாக ஜீவன்குமாரின் அண்ணன் கிஷோர் குமார் ரவுடி தமிழரசனை வெட்டியதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை வலைவீசிதேடி வருகின்றனர்.
அதேபோல், வியாசர்பாடி தாமோதரன் நகர் 3-வது தெருவை சேர்ந்த அலெக்ஸ் (18) என்பவரை நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்ப பயங்கர ஆயுதங்களால் வெட்டியதில் தலையில் பலத்த காயம் அடைந்து சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக எம்.கே.பி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.