ஆயுதத்துடன் வந்த ஆட்டோ டிரைவர் கைது

ஆயுதத்துடன் வந்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-10-15 00:30 IST

கமுதி

கமுதி-சாயல்குடி சாலையில் தனியார் பள்ளி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் புதுக்கோட்டையை சேர்ந்த முருகேசன்(வயது 38) என்பவர் தனது சட்டையின் பின்புறம் முதுகில் வாள் போன்ற ஆயுதத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்