பொன்னியம்மன் கோவிலில் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி
ஆலப்பாக்கம் பொன்னியம்மன் கோவிலில் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது.;
நெமிலி அடுத்த பள்ளுர் ஆலப்பாக்கம் கிராமத்தில் பொன்னியம்மன், முத்துமாரியம்மன் கோவிலில் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ைகாசி மாத திருவிழா நடைபெற்றது. முன்னதாக காலையில் அம்மனுக்கு நெய், பால், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு மதியம் ஊரணி பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அலகுகுத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைதொடர்ந்து அம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா வந்தது. திரளான மக்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
இதைதொடர்ந்து சிறுவஞ்சிபட்டு ஞானமுருகன் தெருக்கூத்து கலைஞர்கள் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியை நடித்துக்காட்டினர்.