ஓட்டலில் சாப்பிட்ட போண்டாவுக்கு பணம் கொடுக்காமல் பெண்ணிடம் தகராறு
ஓட்டலில் சாப்பிட்ட போண்டாவுக்கு பணம் கொடுக்காமல் பெண்ணிடம் தகராறு செய்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.;
சின்னசேலம்:
சின்னசேலம் அருகே உள்ள மேல்நாரியப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மனைவி செந்தமிழ்செல்வி(வயது 32). இவர் அதே பகுதியில் மளிகை கடை, ஓட்டல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு தகரை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆனந்த்குமார்(32), அவரது நண்பர்களான கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன் பிரபு, நைனி மகன் சிவசங்கர், மணி மகன் ராமச்சந்திரன் ஆகிய 4 பேரும் வந்து ஓட்டலில் போண்டா சாப்பிட்டனர். பின்னர் அதற்கு பணம் கொடுக்காமல் செந்தமிழ்செல்வியை அவர்கள் திட்டி, தகராறில் ஈடுபட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தகுமாரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான பிரபு, சிவசங்கர், ராமச்சந்திரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.