மது அருந்தும்போது தகராறு

மயிலாடுதுறையில் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-05-28 18:45 GMT

மயிலாடுதுறையில் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தகராறு

மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி வடபாதி தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் பிரேம்குமார் (வயது 25). அதே பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் மகன் விஜய் (25). நண்பர்களான இவர்கள் இருவரும் மேலும் சில நண்பர்களுடன் சேர்ந்து சேந்தங்குடி சுடுகாட்டு பகுதியில் சம்பவத்தன்று இரவில் மது அருந்தி உள்ளனர். அப்போது பிரேம்குமாருக்கும், விஜய்க்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கைகலப்பாக மாறி உள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த விஜய் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து அரிவாள், உருட்டுக்கட்டையால் பிரேம்குமார், ஆகாஷ், அவினாஷ் ஆகிய 3 பேரையும் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பிரேம்குமார், ஆகாஷ், அவினாஷ் ஆகிய 3 பேரும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

7 பேர் மீது வழக்குப்பதிவு

இந்த சம்பவம் தொடர்பாக பிரேம்குமார் கொடுத்த புகாரின் பேரில் சேந்தங்குடி வடபாதி தெருவை சேர்ந்த விஜய், கண்ணன், செந்தமிழன், தமிழ்ச்செல்வன் ஆகிய 4 பேர் மீது மயிலாடுதுறை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல மற்றொரு தரப்பில் காயம் அடைந்த செந்தமிழன் கொடுத்த புகாரின் பேரில் பிரேம்குமார், ஆகாஷ், அவினாஷ் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நண்பர்கள் சேர்ந்து மது அருந்தும்போது இரு குழுக்களாக பிரிந்து சண்டையிட்டுக் கொண்டதன் மூலம் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்