சிப்ஸ் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் தகராறு

தேனி அருகே சிப்ஸ் வாங்கிவிட்டு பணம் ெகாடுக்காமல் தகராறு செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-12-21 19:00 GMT

தர்மபுரி மாவட்டம், பென்னகரம் அருகே பூச்சூர் பத்ரகள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாயக்கண்ணன் (வயது 30). இவர், தேனி அருகே ஆர்.எம்.டி.சி. நகர் பகுதியில் சாலையோரம் சிப்ஸ் கடை வைத்துள்ளார். இந்த கடையில் போடியை சேர்ந்த சாதிக் மைதீன் மகன் முகமது யூசப் (25), சையது அப்பாஸ் மகன் ஷேக் முகமது (25) ஆகிய இருவரும் சிப்ஸ் வாங்கினர். அதற்கு பணம் கேட்டதற்கு பணம் கொடுக்காமல் தகராறு செய்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் மாயக்கண்ணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது யூசப், ஷேக் முகமது ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்