சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-11-26 18:45 GMT

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பானுமதி தலைமை தாங்கினார்். துணை தலைவர் ரத்தினம் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் சங்கர சுப்பிரமணியன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட செயலாளர் சீலா, அங்கன்வாடி உதவியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் வாசுகி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் இளங்கோ, பழனியப்பன், குமரேசன், மாவட்ட இணை செயலாளர் இளங்கோ, மாவட்ட தணிக்கையாளர் அலமேலுமங்கை, சேதுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில துணைத்தலைவர் மிக்கேலம்மாள் நிறைவுறை ஆற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் பாத்திமா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தின்போது, காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்ததை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கபட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்