மது போதையில் தகராறு செய்த தந்தையை அடித்துக் கொன்ற வாலிபர்
மதுபோதையில் தகராறு செய்த தந்தையை கம்பால் அடித்து வாலிபர் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;
திருச்சுழி,
மதுபோதையில் தகராறு செய்த தந்தையை கம்பால் அடித்து வாலிபர் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மது போதையில் தகராறு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா பரளச்சி அருகே உள்ள ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது 55). கூலி தொழிலாளி. இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். குருசாமி தினமும் குடித்து விட்டு அவரது மனைவி மற்றும் மகன்களிடம் பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் மது போதையில் இருந்த குருசாமி அவரது குடும்பத்தினரிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அடித்துக்கொலை
வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமடைந்த குருசாமியின் 2-வது மகன் ராஜேந்திரன் (23) திடீரென மூங்கில் கம்பால் அவரை தாக்கினார். இதில் காயமடைந்த குருசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து பரௗச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.