வாலிபரை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை லட்சுமி நகர் பகுதியில் கடந்த மே மாதம் 4-ந் தேதி கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் மகன் கோபால் (வயது 35) என்பவரை சிலர் கத்தியால் குத்தி கொலை செய்தனர். விசாரணையில் கோபாலின் மனைவி சுசீலாவும், அவரது கள்ளக்காதலன் மாரீஸ்வரன் இருவரும் சேர்ந்து கூலிப்படையை ஏற்பாடு செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கு தொடர்பாக மாரீஸ்வரன், விஜய், மதன்குமார், மணிகண்டன், லோகேஸ்வரன், வினோத், கோபாலின் மனைவி சுசீலா உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த திருச்சி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்த குட்டி என்கிற அன்புச்செல்வன் (36), பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை பகுதியில் தலைமறைவாக இருந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர