நன்னடத்தை பிரமாண பத்திரம் எழுதி கொடுத்த 422 ரவுடிகள் திருந்தி வாழ்கிறார்களா? போலீசார் திடீர் கண்காணிப்பு
நன்னடத்தை பிரமாண பத்திரம் உறுதிமொழி அளித்தபடி அவர்கள் திருந்தி வாழ்கிறார்களா? என்பதை கண்டறிந்து, இதேபோன்று குற்ற செயல்களில் ஈடுபடாமல் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.
சென்னையில் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக ரவுடிகள் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், இனி குற்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று நன்னடத்தை பிரமாண பத்திரம் அளித்துள்ள 422 ரவுடிகளின் தற்போதைய செயல்பாடுகளை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போலீசார் நேரில் சென்று கண்காணித்தனர். நன்னடத்தை பிரமாண பத்திரம் உறுதிமொழி அளித்தபடி அவர்கள் திருந்தி வாழ்கிறார்களா? என்பதை கண்டறிந்து, இதேபோன்று குற்ற செயல்களில் ஈடுபடாமல் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினர். இந்த சிறப்பு சோதனையின்போது மேலும் 19 ரவுடிகளிடம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெற்றனர்.
சட்டம்-ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட ஒரு ரவுடியையும், வழிப்பறியில் ஈடுபட்டு வந்த ஒரு ரவுடியையும் கைது செய்தனர். ரவுடிகளுக்கு எதிரான இந்த சிறப்பு சோதனை தொடரும் என்றும், குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.