எங்க கைகள் என்ன பூ பறிச்சிட்டு இருக்குமா? - பேனா சிலை குறித்த சீமான் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

கலைஞர் பேனா சிலை குறித்த சீமான் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.;

Update: 2023-02-01 08:25 GMT

சென்னை,

சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு கங்காதரேஸ்வர் திருக்கோவிலில் இந்து அறநிலை துறையின் சார்பில் ராஜகோபுரம் உட்பட பல சீரமைத்தல் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

கங்காதரேசுவர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உண்டான திருப்பணிகள் அடுத்த எட்டு மாதங்களுக்குள்ளாக முடிக்க நடவடிக்கை எடுத்து இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

திமுக ஆட்சியில் தான் உபயதாரர்கள் மனமுவந்து தரும் தொகை முழுமையாக திருக்கோவிலுக்கு செய்யப்படும் என நம்பிக்கை வந்துள்ளது. தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, திருக்கோயில்களுக்கு உபயதாரர்கள் மூலமாக 600 கோடி ரூபாய் வரை நன்கொடை வந்துள்ளது.

பின்னர் பேனா சிலை குறித்த சீமான் பேச்சு குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக்கொண்டிருக்குமா?. கை அவருக்கு மட்டும்தான் இருக்கா... எல்லாருக்கும் கை இருக்கு.. இந்த பதிலே அவருக்கு போது! எனத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்