அரயபுரம் வீரமகாசக்தி பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா
அரயபுரம் வீரமகாசக்தி பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா
பாபநாசம் அருகே அரயபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வீரமகாசக்தி பத்திரகாளியம்மன் கோவில் 12-ம் ஆண்டு திருவிழா கடந்த 17-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 108 சிவாலயம் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் சக்திகரகம், திரிசூலம், அக்னி கொப்பரை, பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.