அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள்
அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது.;
அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நேற்று கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த விளையாட்டு போட்டிகளில் அரவக்குறிச்சி குறுவட்டத்தை சேர்ந்த 30 பள்ளிகளை சேர்ந்த 450 மாணவர்களும், 350 மாணவிகளும் கலந்து கொண்டனர். இதில் நேற்று நடைபெற்ற மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 600 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம், குண்டு எறிதல் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. மாணவிகளுக்கான போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் முதல் 2 இடங்களில் வெற்றிபெறும் மாணவர்கள் மாவட்ட வருவாய் அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், குறுவட்ட செயலாளர் மதுரைவீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.