அரப்ஷா தர்கா கந்தூரி விழா

நாகை காடம்பாடி அரப்ஷா தர்கா கந்தூரி விழா நடந்தது.

Update: 2022-12-27 18:45 GMT

நாகை காடம்பாடியில் அரப்ஷா தர்கா உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த தர்கா கந்தூரி விழா நேற்று முன்தினம் இரவு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நாகை செட்டி தெருவில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாக சென்று தர்காவை வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து துவா ஓதப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. சர் அகமது தெருவில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு, இரவு 10 மணியளவில் தர்காவை வந்தடையும். இதைத்தொடர்ந்து சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்