ஆரணியில் ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விற்பனை விறுவிறுப்பு

ஆயுத பூஜையையொட்டி ஆரணியில் பூக்கள் விற்பனை விறுவிறுப்படைந்தது.

Update: 2023-10-22 18:45 GMT

ஆரணி

ஆயுத பூஜையையொட்டி ஆரணியில் பூக்கள் விற்பனை விறுவிறுப்படைந்தது.

நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள், வாகனங்களை சுத்தம் செய்து ஆயுத பூஜைக்கு பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த பூஜைக்கு தேவைப்படும் வாழைக்கன்றுகள், தேங்காய், பழம், பூக்கள், அவல், பொரி, கடலை உள்ளிட்ட பூஜை பொருட்கள் கடந்த 2 நாட்களாக வியாபாரிகள் வீதிகளில் குவித்து வந்தனர். மேலும் திருஷ்டி கழிக்க பயன்படுத்தும் பூசணிக்காய்களும் குவிக்கப்பட்டன.

இவற்றின் விற்பனை நேற்று களை கட்டியது. ஆரணி நகரின் காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, கோட்டை மைதானம், அண்ணா சிலை பகுதிகளில் நேற்று காலை முதல் இவற்றை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது. ஆனால் பூஜை பொருட்களின் விலை அதிகமாக இருந்தது. எனினும் விலையை பொருட்படுத்தாமல் அவற்றை பொதுமக்கள் வாங்கிச்சென்றதை காண முடிந்தது. குறிப்பாக பூக்கள், பழங்கள் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்