அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா

கடையநல்லூர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது

Update: 2022-12-18 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் நூருல் ஹுதா மகளிர் அரபிக் கல்லூரி 12-வது ஆண்டு ஆலிமா நூரிய்யா பட்டமளிப்பு விழா மதினா நகரில் நடந்தது. கல்லூரி முதல்வர் ஏ.எஸ்.ஹிதாயத்துல்லாஹ் ஆலிம் தலைமை தாங்கினார். மதினா நகர் பள்ளிவாசல் தலைவர் டி.எம்.அப்துல் மஜீத், செயலாளர் எஸ்.சம்சுதீன், பொருளாளர் கே.நயினா முகம்மது, கே.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் ஆலிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி ஹனா பாத்திமா கிராஅத் ஓதினார். கல்லூரி நிர்வாகி டி.எம்.அப்துல் குத்தூஸ் ஆலிம் வரவேற்றார். பேராசிரியர் எம்.ஏ.செய்யது இப்ராஹிம் ஆலிம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வல்லம் என்.எம்.முஹம்மது சுல்தான் ஆலிம், தென்காசி மாவட்ட அரசு காஜி ஏ.ஒய்.முஹ்யித்தீன் ஹழ்ரத், மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளர் வடகரை கே.ஐ.ஷாகுல் ஹமீது ஆலிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக்கல்லூரி முதல்வர் எஸ்.ஏ.ஹைதர் அலி 10 மாணவிகளுக்கு ஸனது பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்.

எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் சமுக சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்டது. விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடையநல்லூர் நகர தலைவர் பி.ஏ.செய்யது மசூது, துணை தலைவர் ஜே.கே.செய்யது இமாம், தொகுதி அமைப்பாளர் எஸ்.எஸ்.ஹைதர் அலி, அப்துல் மஜீத் ஆலிம், சாகுல் ஹமீது, பேராசிரியர் எஸ்.என்.காஜா முஹையதீன் ஆலிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பள்ளிவாசல் இமாம் கே.ஏ.அஹமது மீரான் ஆலிம் துஆ ஓதினார். வி.எஸ்.அப்துல் ரசாக் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்