பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திறனறி தேர்வு

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திறனறி தேர்வு நடந்தது.;

Update:2023-03-25 23:57 IST

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு, ஆசிரியர் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பு பற்றுறுதி தமிழ் சங்கத்தின் சார்பில் கல்வி திறன் சார்ந்த தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் திறனறி தேர்வானது சிறுவாச்சூர் மானிய தொடக்கப்பள்ளியில் நேற்று நடத்தப்பட்டது. தேர்வினை ஆலத்தூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் வஹிதா பானு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாணவ-மாணவிகளின் கல்வி திறனை சோதித்தறிய வினாத்தாளானது ஏ, பி என 2 வகைகளில் தயாரிக்கப்பட்டு 50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 19 ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் இருந்து மொத்தம் 51 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேர்வை எழுதினர். தேர்வு எழுதியவுடன் விடைத்தாள்கள், ஆசிரியர்களை கொண்ட மதிப்பீடு குழுவினர்களால் திருத்தப்பட்டு முதல் 5 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சத்திரமனை பள்ளி மாணவன் சாய் பிரசாத் முதலிடமும், 2-ம் இடத்தை சிறுகன்பூர் பள்ளி மாணவி சகானாவும், அய்யனார்பாளையம் பள்ளி மாணவி சர்மிதாவும், 3-ம் இடத்தை எசனை பள்ளி மாணவி பூமிகாவும், சத்திரமனை பள்ளி மாணவி கானஸ்ரீயும், மலையாளப்பட்டி பள்ளி மாணவி மிருதிகாவும் பிடித்தனர். தேர்வில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்