யோகா போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு
யோகா போட்டியில் சாதனை படைத்த தென்காசி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;
செங்கோட்டை டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் கரூர் மாவட்டத்தில் நடத்திய ஆசிய பசிபிக் யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப்-2023 தேர்ச்சி போட்டியில் கலந்து கொண்டனர். இதில் 5-ம் வகுப்பு மாணவன் முகிலன், 6-ம் வகுப்பு மாணவன் முகமது அப்துல்லா முதலிடத்திலும், 7-ம் வகுப்பு மாணவன் இஷாந்த் ராகவன், முகமது இலியாஸ், 5-ம் வகுப்பு மாணவன் தருண் பிரசாத் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் தாய்லாந்து நாட்டில் நடைபெறக்கூடிய ஆசிய பசிபிக் யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப்-2023க்கு தேர்ச்சி பெற்றனர். இந்த மாணவர்களுக்கு யோகா ஆசிரியை மாதவி பயிற்சி அளித்தார். வெற்றி பெற்று தாய்லாந்திற்கு பயணம் மேற்கொள்ளும் மாணவர்களை பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.