அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா

பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

Update: 2023-05-16 19:40 GMT

நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் நர்மதா, சந்தோஷினி, உமா ஆகியோரை பாராட்டி பொன்னாடை அணிவித்து உதவித்தொகை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெல்லை பகுதி தி.மு.க துணை செயலாளர் அப்துல் சுபஹானி, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் குமார் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்