ஜி.பி.பார்மசி கல்லூரியில் பாராட்டு விழா
ஜி.பி.பார்மசி கல்லூரியில் தாளாளர் மகனுக்கு பாராட்டு விழா நடந்தது.;
திருப்பத்தூர்
ஜி.பி.பார்மசி கல்லூரியில் தாளாளர் மகனுக்கு பாராட்டு விழா நடந்தது.
திருப்பத்தூர் ஜி.பி.பார்மசி கல்லூரியின் தாளாளர் ஜி.பொன்னுசாமியின் மகனும், கல்வி அறக்கட்டளையின் இயக்குனருமான டாக்டர் நந்தகுமார் அமெரிக்க மருத்துவ பல்கலைகழக தேர்வாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையொட்டி கல்லூரியில் பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு தாளாளர் ஜி.பொன்னுசாமி தலைமை தாங்கினார். அறக்கட்டளை தலைவர் ஈஸ்வரி பொன்னுசாமி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் தீன்குமார் வரவேற்றார்.
டாக்டர் நந்தகுமாருக்கு சால்வை அணிவிக்கப்பட்டு, கல்லூரியின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் இயக்குனர்கள் டாக்டர் பிரபாகரன், அகிலா யுவராஜன், டாக்டர் லலிதா லட்சுமி, டாக்டர்கள் சுஜாதா, அமிர்தவர்ஷினி மற்றும் அரசியல் பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.