அரசு பள்ளி மாணவி முதல் பரிசு

மாநில அளவிலான களிமண் சிற்ப போட்டியில் அரசு பள்ளி மாணவி முதல் பரிசு பெற்றார்.;

Update: 2023-01-01 18:45 GMT

சிங்கம்புணரி, 

தமிழகத்தில் கலைத்திருவிழா போட்டி நடைபெற்று வருகிறது. இதில் அரசு பள்ளிகளில் படிக்கின்ற 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் கலை திருவிழா போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவ, மாணவிகளின் கலை திறன்களை ஊக்குவிக்க இந்த போட்டி நடந்து வருகிறது. அதன்படி மாநில அளவிலான களிமண் சிற்ப போட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

சிங்கம்புணரி ராணி மதுராம்பாள் ராஜாயீ நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவி பகவதி கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றார். இவர் செய்த களிமண் ஓவியமானது பாதி வெட்டப்பட்ட மரத்தில் மேல் அமர்ந்த பறவைகள் வருத்தப்படுவது போல் சிற்பமாக அமைக்கப்பட்டும், மரத்தை வளர விடுங்கள் மரம் நம்மை வாழ வைக்கும், காடுகளின் அழிவு உயிரினங்களின் பேரழிவு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகை வைத்து அமைக்கப்பட்டதற்காக மாணவிக்கு மாநில அளவிலான முதல் பரிசு கிடைக்கப்பெற்றது. மாநில அளவில் முதல் பரிசு பெற்ற மாணவியை, பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாநிதி சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் பாராட்டினர். 

Tags:    

மேலும் செய்திகள்