திருப்புவனம்
திருப்புவனம் அருகே சக்கந்தி ரேஷன்கடையில் எடையாளராக பணியாற்றி வரும் ராஜன் என்பவரின் பணியை பாராட்டி கடந்த 2022-23-ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த எடையாளருக்கான 2-வது பரிசு மற்றும் சான்றிதழை தமிழக அரசு வழங்கியது. அந்த சான்றிதழை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் காட்டி அவர் வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சிவகங்கை மண்டல இணைபதிவாளர் ஜினு, பொதுவினியோக திட்ட துணை பதிவாளர் குழந்தைவேலு, சிவகங்கை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் குருசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.