மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு அமைச்சர் பாராட்டு

மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு அமைச்சர் பாராட்டு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-01-08 18:45 GMT

சிங்கம்புணரி,

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் 11,12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான களிமண் சிற்ப போட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த களிமண் சிற்ப போட்டியில் சிங்கம்புணரி ராணி மதுராம்பாள் ராஜயீ நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவி பகவதி முதல் பரிசு பெற்றார்.

இவர் செய்த களிமண் ஓவியமானது பாதி வெட்டப்பட்ட மரத்தில் மேல் அமர்ந்து பறவைகள் வருத்தப்படுவது போன்ற சிற்பமாக அமைக்கப்பட்டும், மரம் வளா்த்தல் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்து செய்ததற்காக மாணவிக்கு மாநில அளவிலான முதல் பரிசு கிடைக்கப்பெற்றது. மாணவி பகவதிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாநிதி சக்திவேல் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் சிங்கம்புணரி வந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் மாநில அளவில் முதல் பரிசு பெற்ற மாணவி பகவதிக்கு வாழ்த்து தெரிவித்து கேடயம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் பூமிநாதன், பாலசுப்பிரமணியன், பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, நகர அவைத்தலைவர் சிவக்குமார் ரெங்கநாதன், நகரச்செயலாளர் கதிர்வேல், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் இந்தியன் செந்தில், ஒன்றிய துணை செயலாளர்கள் சிவபுரி சேகர், முத்துக்குமார், ஒன்றிய ெபாருளாளர் பாஸ்கரன், பிரதிநிதி குடோன்மணி, புகழேந்தி, சூரக்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த கிருஷ்ணன், மருத்துவர் அருள்மணி நாகராஜன் மாவட்ட பிரதிநிதிகள் செல்வகுமார், பிரான்மலை ஞானசேகரன், பிரான்மலை வனக்குழு தலைவர் செந்தில்குமார், நகர துணை செயலாளர் அலாவுதீன் தி.மு.க. ஒன்றிய, நகர நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்