விஸ்வபாரதி மெட்ரிக் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த தர்மபுரி விஸ்வபாரதி மெட்ரிக் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;
தர்மபுரி அடுத்த ஏ.ஜெட்டிஅள்ளியில் உள்ள ஸ்ரீ விஸ்வபாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்தனர். .12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த பள்ளியை சேர்ந்த மாணவி கவிதா 562 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி ஷபிபா அர்ஷின் 560 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், மாணவி ரித்திகா 549 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இதேபோன்று 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் ராஜமூர்த்தி, இனியா, சுருதி ஆகியோர் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் 3 இடங்களை பிடித்தனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் பெரியண்ணன், மதிவாணன், தேஜஸ்வினி ஆகியோர் பள்ளியில் முதல் 3 இடங்களை பிடித்து பெருமை சேர்த்துள்ளனர். இந்த சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு தர்மபுரி கெஜலட்சுமி அம்மாள் நினைவு கல்வி அறக்கட்டளை தலைவரும், ஸ்ரீ விஸ்வபாரதி பள்ளி தலைவருமான கே.ரவி தலைமை தாங்கி சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி பேசினார். இந்த விழாவில் பள்ளி தாளாளர் சாந்தி ரவி மற்றும் முதல்வர், ஆசிரிய-ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.